பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹெல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து தனியார் ஊடகத்திற்கு ஜே.டி.வான்ஸ் அளித்த பேட்டியில், பயங்கரவாத தாக்குதலுக்குப் பரந்த பிராந்திய போருக்கு வழிவகுக்காமல் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், தங்கள் பிரதேசத்தில் செயல்படும் பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட்டு, கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய இந்தியாவுடன் பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.