ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ஒவ்வொரு ராக்கெட்டும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதிக்கு சென்ற பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே என சுமார் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அவர், விண்வெளித்துறையில் இந்தியா சிறந்து விளங்க ஆந்திர பிரதேச மாநிலம் பெரும் பங்காற்றி வருவதாக தெரிவித்தார்.
நவ் துர்கா சோதனைத் தளம் இந்தியாவில் பாதுகாப்பு சக்தியை வலுப்படுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில், ஆந்திராவில் 750 ரயில் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்,விழாவில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை அருகில் அழைத்த பிரதமர் மோடி அவருக்கு சாக்லேட் வழங்கினார்.