நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி என்று
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில அரசின் அழைப்பை ஏற்று, மக்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததற்காக பிரதமருக்கு நன்றி கூறினார்.
ஆந்திர மக்கள் தங்களுக்கென ஒரு தலைநகரம் வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசைப்பட்டு, அதற்காகப் போராடி, பல ஆண்டுகளாக அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர் என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியின் உரை, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை ஊக்குவித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கு சரியான மற்றும் துணிவான தலைவர் பிரதமர் மோடி எனவும் புகழாரம் சூட்டினார்.