நாடு முழுவதும் 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் திரும்பப் பெறப்படும் என ஆர்.பி.ஐ. அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தவர்கள் அதனை வங்கிகளில் மாற்றி மாற்றுப் பணம் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை 6 ஆயிரத்து 266 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் வங்கிகளுக்குத் திரும்பாமல் புழக்கத்தில் இருப்பதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.