திருப்பதியில் ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து உள்ளது.
தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் பல்வேறு ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மாநில ஆக்டோபஸ் தீவிரவாத தாக்குதல் தடுப்பு நடவடிக்கை கமாண்டோக்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
அப்போது, தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்வது குறித்தும், அவர்களைத் தாக்குவது குறித்தும் தத்ரூபமாகச் செய்தனர்.