திருச்செந்தூர் அருகே ஆசிரியரின் பணி ஓய்வு நாளில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
நடுநாலுமூலைக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் திருமணி என்பவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
அவரது பணிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், பள்ளிச் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் மாணவர்கள் மட்டும்மல்லாது அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் கண்ணீர் விட்டனர்.
தொடர்ந்து பள்ளி வளர்ச்சிக்காக ஐம்பதாயிரம் ரூபாயை ஆசிரியர் வழங்கினார்.