மிகப்பெரிய எண்டர்டெய்னரான நடிகர் விஜய் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டூரிஸ்டு ஃபேமிலி’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு வந்த திரைப்படக் குழுவினர் ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சசிகுமார், டூரிஸ்டு ஃபேமிலி படத்திற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் மிகப்பெரிய எண்டர்டெய்னர் எனவும், அவர் அரசியலுக்குச் சென்றாலும் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேபோல, பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.