மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
முன்னதாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அங்கோலா அதிபர் ஜோவோ மானுவலை, பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் கூட்டாக நிருபர்களைச் சந்தித்துப் பேசிய மோடி, பயங்கரவாதம் மனிதக்குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனக் கூறினார். மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.