சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்றதாக தகவல் வெளியான நிலையில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 6 தீவிரவாதிகள் சென்னையிலிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் தப்பி சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.