தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நான்கு ஆண்டுகள் சும்மா இருந்துட்டு அடுத்த ஓராண்டுகள் வேலை பாருங்கள் என்று சொல்வது நான்கு ஆண்டுகள் எந்த வேலையும் செய்யவில்லை என்பதை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிமுக கூட்டணி சரியான கூட்டணி அல்ல என்று முதல்வர் கூறுவது அவரின் பயத்தை காட்டுவதாக கூறினார்.
திமுக எம் எல் ஏ அனைவரும் ஆளுநர் குறித்து கடும் விமர்சனம் செய்து விட்டு தற்போது எந்த அதிகார போக்கும் இல்லை என்று கூறுவதை எப்படி ஏற்று கொள்வது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.