உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 இஸ்லாமியர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து மதத்திற்கு மாறினர்.
ஷெர்கர் பகுதியில் ஜாகிர் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் இந்து மதத்திற்கு மாறினார். மேலும் ஜாகிர் என்ற தனது பெயரை ஜகதீஷ் என்றும் அவர் மாற்றிக் கொண்டார்.
மேலும் பல ஆண்டுகளுக்கு முன் முகலாயர்கள் தங்கள் முன்னோர்களை கட்டாய மதமாற்றம் செய்ததாக கூறிய ஜகதீஷ் இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாக நெகிழ்ச்சியடைந்தார்.