செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியாக செல்லும் தண்ணீரை இந்தியா நிறுத்தியுள்ளது.மேலும், ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தான் மீது இன்னொரு அடியாக இந்தியா மற்றொரு முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பாக்லிஹார் அணையில் இருந்து செனாப் நதி நீர் வெளியேறுவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கிஷங்கங்கா அணையில் இருந்து ஜீலம் நதி நீரை வெளியேற்றுவதை நிறுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.