இந்தியாவில் விளையாட்டு ஒரு கலாச்சாரமாக முத்திரை பதித்து வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேலோ இந்தியா தொடக்க விழாவில் காணொலி வாயிலாக பேசிய அவர், விளையாட்டு என்பது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது எனக் கூறினார். விளையாட்டு மைதானங்கள் வெறுமனே போட்டிகள் நடத்துவதற்கான இடமாக மட்டும் இல்லாமல், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐபிஎல் போட்டியில் அதிவேக சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய பிரதமர் மோடி, பீகாரின் மகன் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான ஆட்டத்தை தான் கண்டுகளித்ததாக தெரிவித்தார்.
சூர்யவன்ஷி இளம் வயதில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்துள்ளதாகவும், அவரது ஆட்டத்திற்குப் பின்னால் கடின உழைப்பு உள்ளதாகவும் கூறினார்.