பாகிஸ்தானுடனான பதற்ற சூழலில் பஞ்சாப் எல்லையில் மின்சார துண்டிப்பு சோதனை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பஞ்சாப்பின் பெரோஸ்பூர் நகரில் கன்டோன்மென்ட் பகுதியில் நேற்றிரவு 9 முதல் 9.30 மணி வரை அரை மணிநேரத்திற்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து சோதனை நடத்தப்பட்டது.
போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், அதற்கு தயாராவதற்காகவும் மற்றும் இந்த சோதனையை நடைமுறைப்படுத்தி வெற்றி காண்பதும் ஒத்திகையின் நோக்கம் என அதிகாரி ஒருவர் கூறினார்.