மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்ததில் நூலிழையில் திமுக எம்.பி.ஆ.ராசா உயிர் தப்பினார்.
மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார். பொதுக்கூட்டத்திற்கான மேடையில் ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.
விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார். இதனால் திமுக பொதுக்கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.