கோவையில் பண்ணை வீடுகளில் தனியாக வசிப்போர் அருகாமையில் வசிப்பவர்களிடம் செல்போன் எண்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாகப் பண்ணை வீடுகளில் குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாகப் பண்ணை வீடுகள் அதிகம் உள்ள ஆனைமலை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பண்ணை வீடுகளில் உள்ள நபர்கள் தோட்டத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், வெளியூர் செல்வோர் முன்கூட்டிய காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தனிமையில் உள்ளவர்கள் வீடு மற்றும் தோட்டத்தைச் சுற்றி போதிய வெளிச்சம் வரும் வகையில் அமைத்திருக்க வேண்டும்
என அறிவுறுத்தினார்.