போதைப் பொருள் பயன்படுத்தியதால் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்று முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, அதன் பின் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகக் கூறி தாயகம் திரும்பினார்.
இந்த நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியன் காரணமாக தனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.