பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
450 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்லும் திறன் கொண்ட அப்தாலி ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்ததாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் ஏவுகணை சோதனையை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.