எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
Sep 12, 2026, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இப்படி கண்களைப் பறிக்கும் தண்ணீருடன் தகதகவென மின்னும் வைகை அணை. ஆனால் வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறோ காய்ந்து கட்டாந்தரைபோல் காட்சியளிப்பது பலரையும் வேதனைப்பட வைத்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி  நடைபெறுவது வழக்கம்.

8  ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது  மூல வைகை ஆறு. வைகை அணையின் முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வரும் மூல வைகை ஆறுதான் தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்த காரணத்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையாலும்  வெயில் காலங்களில்கூட மூல வைகை ஆற்றில் நீர் வரத்து கணிசமாக இருந்தது. ஆனால்  இந்த ஆண்டோ பருவ மழை சரியாகப் பெய்யாத நிலையில் மூல வைகை ஆறு கடந்த ஒரு மாதமாகத் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு மணல் மேடாக காட்சியளிக்கிறது.  மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைபாதையாக மாறி வருகிறது

மூல வைகை ஆறு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கடமலை – மயிலை ஒன்றிய பகுதிகளில் 10 முதல் 15  நாட்களுக்கு ஒரு முறையே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால் விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். மூல வைகை ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட உறைக் கிணறுகளை முறையாகத் தூர்வாரியும், பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

எப்படி இருந்த  மூல வைகை ஆறு இப்படி ஆயிடுச்சே என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் பெருமூச்சாக இருக்கிறது. குடிநீர்த் தேவையும், விவசாயமும் என்ன ஆகுமோ என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Tags: குடிநீர் தட்டுப்பாடுtamil janam tvtamil nadu news todaytn agricultureHow did the river become like this...?: The dried-up Vaigai River poses a risk of water shortage
Share
Tweet
SendShare
Previous Post

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

Next Post

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies