பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் உரையாடிய அவர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.