பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாகத் தமிழகம் உள்ளது எனவும் அவர்களை விரட்டத் தமிழக அரசு அச்சப்படுவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தும், அது தொடர்பாக ஆதாரமற்ற கருத்துக்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாகக் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே பாஜக தேசிய தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீவிரவாதத்திற்குத் துணை போகும் செயலை தமிழக அரசு கைவிட்டு சட்ட விரோத குடியேறிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.