இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க அந்நாட்டு மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாகப் பாகிஸ்தான் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளிக்க மறுப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்கலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதியில் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போதும் அங்கிருந்தவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனையடுத்து பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா என்பவர் இந்தியாவை விடப் பாகிஸ்தான் ராணுவம் தான் அடக்குமுறையைக் கையாளுவதாகக் கண்டனம் தெரிவித்தார்.