ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் தனது இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளவர் ஏ.ஆர்.ரகுமான்.
அந்தவகையில், மும்பையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனுஷும் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது இருவரும் சேர்ந்து உசுரே நீதானே பாடலை பாடினர். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் தேரே இஷ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.