மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மற்றும் பிரிட்டன் வீர ஜேக் டிராபர் மோதினர்.
முதல் செட்டை 7 க்கு 5 என்ற புள்ளிக்கணக்கில் கேஸ்பர் ரூட்டும், 2வது செட்டை 6 க்கு 3 என்ற புள்ளிக்கணக்கில் ஜேக் டிராபரும் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் 6 க்கு 4 என்ற புள்ளிக்கணக்கில் ஜேக் டிராபை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கேஸ்பர் கைப்பற்றினார்.