குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
சிலகோட்டா கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதில் ஏராளமான வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
















