போர் சூழலால் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் எனவும், பாகிஸ்தான் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாகவும் மூடிஸ் என்ற நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செய்யப்பட்ட ஏற்றுமதியின் அளவு 0.5 சதவீதமாக உள்ளது எனவும் இதனால் இந்தியாவுக்குப் பொருளாதார நெருக்கடி இருக்காது என்றும் தெரியவந்துள்ளது.
போர் பதற்றம் பாகிஸ்தான் நாட்டினை வெகுவாக பாதித்து அந்நிய செலவாணி கையிருப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் மூடிஸ் நிதி சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.