மினி ஆம்புலன்ஸ்களுக்கு மவுசு : கட்டணம் குறைவு மக்கள் வரவேற்பு!
Jul 22, 2025, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மினி ஆம்புலன்ஸ்களுக்கு மவுசு : கட்டணம் குறைவு மக்கள் வரவேற்பு!

Web Desk by Web Desk
May 6, 2025, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவசர சிகிச்சைக்கு ஆபத்பாந்தவனாக வரும் ஆம்புலன்ஸ்கள் நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து அடித்தட்டு மக்கள் வரையிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் மினி ஆம்புலன்ஸ்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. அது என்ன மினி ஆம்புலன்ஸ்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..!

தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை  தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.  மத்திய அரசு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அமல்படுத்திய நிலையில், மாநில அரசோ  இலவச அமரர் ஊர்தி திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதன் காரணமாக ஆம்புலன்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்த தனியார் பலர் மாற்றுத் தொழில் செய்யத் தொடங்கினர். ஆனால் ஆம்புலன்ஸ் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது என்ற நிலையில் இருந்த தனியார் சிலர் புதிய வியூகத்துடன் களம் இறங்கி உள்ளனர்.

108 ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்தி வாகனங்கள் ஆகியவை குறுகலான சாலை, அடுக்குமாடிக்குடியிருப்பு வீடு பகுதிகள், சந்துகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிறிய அளவிலான வாகனங்களை நாட தொடங்கி உள்ளனர்.

இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், பொது மக்களின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறிய அளவிலான ஈகோ வேன், ஆம்னி வேன் ஆகியவற்றை ஆம்புலன்ஸ்களாக மாற்றி வருகின்றனர்.

மினி ஆம்புலன்ஸ் என அழைக்கப்படும் இந்த வாகனங்கள் 3 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை விலைக்குக் கிடைக்கின்றன. பராமரிப்பு செலவும் மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் டெம்போ ட்ராவலர் சுற்றுலா வாகனங்களை வாங்கி ஆம்புலன்ஸ் வாகனங்களாக மாற்ற 18 லட்சம் ரூபாய் முதல் 22 லட்சம்  ரூபாய் வரை ஆகிறது.

மினி ஆம்புலன்ஸ்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18 கிலோ மீட்டர் தொலைவு வரை இயங்குகின்றன.  கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நிர்ணய கட்டணம் என்ற அடிப்படையில் ஏழாயிரம் ரூபாய் முதல், தூரத்தைக் கணக்கிட்டு 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. ஆனால் பெரிய ஆம்புலன்ஸ்களுக்கு பராமரிப்பு செலவு அதிகம் என்பதோடு, ஒரு கிலோமீட்டருக்கு கட்டணமாக 22 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நிர்ணய கட்டணமாகக் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதல் தூரத்தின் அடிப்படையில் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.

இதன் காரணமாக மினி ஆம்புலன்ஸ்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.  சேலம் உட்படப் பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் முன்பு அதிக அளவில் மினி ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவற்றின் வருகையால் பெரிய ஆம்புலன்ஸ்களின் பயன்பாடும் குறைந்து வருகிறது.

Tags: அவசர சிகிச்சைmini ambulancesnews tnTamil NaduMouse for mini ambulances: People welcome lower faresமினி ஆம்புலன்ஸ்களுக்கு மவுசு
ShareTweetSendShare
Previous Post

பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு நாளை தொடக்கம்!

Next Post

போர் ஒத்திகை : எங்கு, எப்படி நடக்கும்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்? – சிறப்பு தொகுப்பு!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

2026 தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்திக்கும் : அண்ணாமலை

திருவண்ணாமலை : தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies