பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பதில் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை எழும்பூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இதுதொடர்பாக பேசியவர்,
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றும் தேசத்திற்கு எதிராகப் பேசுபவர்களை, செயல்படுபவர்களைக் குறைந்தபட்சம் கைதாவது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்
தேசமே முக்கியம் என ரேவந்த் ரெட்டி கூறினார், ஆனால் ஸ்டாலின் கேள்வி எழுப்பியது வருந்தத்தக்கது என்று கூறியவர், பாரத நாடு வளம்பெறும் நாடு, இது ஆன்மீக பூமி, இங்குத் தீவிரவாதத்திற்கு அனுமதி இல்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதிகரித்துள்ளது என்றும் கொங்கு மண்டலத்தில் மட்டும் 5 படுகொலைகள் நடந்துள்ளது என அவர் குற்றம்சாட்டினார்,