சவுதி அரேபியாவின் அல்-ராஸ் பகுதியில் இரண்டாவது நாளாகப் புழுதி புயல் தாக்கியது.
ஆசிர், அல்-பஹா, ஜசான், மக்கா, நஜ்ரான், மதீனா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி புழுதி புயல் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில், அல்-ராஸ் பகுதியிவிண்ணை முட்டும் அளவு புழுதி புயல் நேற்று உருவானது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். பெரும்பாலான மக்களுக்குச் சுவாச கோளாறும் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து மீண்டும் புழுதி புயல் ஏற்பட்டது.