சென்னை திருமங்கலத்தில் போலி கணக்குக் காட்டி டிராவல்ஸ் நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஜெயசித்ரா என்பவர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாகப் போலியான ஓட்டுநர்களைக் கணக்கில் காட்டி ஜெயசித்ரா 30 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததை பிரசாந்தின் ஆடிட்டர் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து பிரசாந்த் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஜெயசித்ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.