பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து நள்ளிரவு 1.44 மணி முதல் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்யும் ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் அமைப்பின் தலைமையிடத்தைக் குறிவைத்து முப்படைகளும் தாக்குதல் நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் உள்ள மக்கள், பொருளாதார மண்டலம், பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாத முகாம்களில் மீது இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை இரவு முழுவதும் பிரதமர் மோடி கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.