இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் விரைவில் தணியும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் முகாமிட்டு இருந்த பயங்கரவாத அமைப்புகள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.
இது குறித்து அறிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் பதற்றம், விரைவில் தணியும் என நம்புவதாகக் கூறினார்.