பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே ஆப்ரேஷன் சிந்தூர் கையிலெடுக்கப்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 21 பயங்கரவாத முகாம்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பயங்கரவாதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்குவதற்காக இந்திய ஆயுதப்படைகளால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, அதன் விவரங்களை வெளியிட்டார்.