கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியைச் சூறையாடிய வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து வெடித்த கலவரத்தில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. தொடர்ந்து இது குறித்த வழக்கை சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடையவர்களை நேரில் ஆஜராக கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி உள்ளிட்ட 615 பேருக்குச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் வழங்கினர்.