இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் எனப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விரோதமாக எதையும் செய்யமாட்டோம் எனக் கடந்த இரு வாரங்களாகக் கூறி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தாக்குதலைத் தொடர்ந்தால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா தாக்குதலை நிறுத்தினால் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கத் தயார் என்றும், இத்தகைய சூழலில் இரு நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து தமக்குத் தெரியாது எனவும் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.