நள்ளிரவில் 4 டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தான் நாட்டு மக்கள் தெரிவித்தனர்.
தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானின் முர்டிகே பகுதி மக்கள் பேட்டியளித்துள்ளனர்.
அதில் நள்ளிரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போது 4 டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், பின்னர் அடுத்தடுத்து வந்த ட்ரோன்களும் தாக்கத் தொடங்கியது எனவும் தெரிவித்தனர்.
பயங்கர சத்தத்துடன் நடைபெற்ற டிரோன் தாக்குதலால் பதற்றமும், பீதியும் நிலவுவதாக முர்டிகே பகுதி மக்கள் கூறியுள்ளனர்.