பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்த விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோபியா குரேஷி, ”ஆபரேஷன் சிந்தூர்” என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து சுமார் 25 நிமிடங்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தாத வகையில், சரியான திட்டமிடலுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய அதிகாரிகள், வெகு தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்க ஸ்கால்ப் ஏவுகணைகளும், குறுகிய தூரத்தில் உள்ள இலக்கினை தாக்க ஹேமர் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக விளக்கமளித்தனர்.
மேலும், பாகிஸ்தான் ராணுவ தளங்களைக் குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.