தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை விமர்சிப்பது வேதனை அளிக்கிறது என்றும் தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.
பிரதமருக்குத் துணை நிற்போம் என்றுகூடத் தமிழக அரசால் சொல்ல முடியவில்லை என்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் பரந்த மனப்பான்மையுடன் செயல்படவில்லை என்று அவர் கூறினார்.