தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் விண்ணப்ப பதிவு இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்.
பொறியியல் சேர்க்கைக்கு ஜூன் 3ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 9ஆம் தேதி கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 10ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், ஜூன் 27ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.