சேலம் மாவட்டம், ஆத்தூரில் திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 27-ம் தேதி காப்புக் கட்டுதலோடு திருவிழா தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மற்றும் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பக்தர்கள் தீர்த்தக்குடங்களைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்த நிலையில், அதன் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.