திமுக ஒன்றிய செயலாளர் துணையோடு தனது குடும்பத்தை கிராமத்தில் இருந்து வெளியேற்ற முயல்வதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் தனது மனைவியுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அறிவூரைச் சேர்ந்த சிதம்பரநாதன், சுவாமிநாதன் மற்றும் ரவி ஆகியோர், தங்கள் நிலத்தை அபகரித்ததுடன் தனது குடும்பத்தை ஊரை விட்டு வெளியேற்ற முயல்வதாகத் தெரிவித்தார்.
தன்னையும் தனது குடும்பத்தாரையும் அவர்கள் கொலை செய்ய முயன்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், முதலமைச்சர் தங்கள் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.