ஆப்ரேஷன் சிந்தூர்தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளுக்கு வெளியுறவுத்துறை உரிய விளக்கம் அளித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
தென்கொரியா, டென்மார்க் உள்ளிட்ட 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக உள்ளன. டெல்லியில் இந்த 15 நாடுகளின் பிரநிதிநிதிகளையும் அழைத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூா் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விளக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கான சீன தூதர் ஸூ ஃபெய்ஹாங்கையும் அழைத்துத் தாக்குதல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.