ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் தாக்குதலில் வீடுகள், வாகனங்கள் சேதமடைந்ததால், ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.