எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து நேற்று இரவு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் இலக்குகள் மீது இந்திய விமானப்படையின் S-400 சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் ஏவப்பட்டன. இந்த நடவடிக்கையில் இலக்குகள் வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைக்க இந்திய இராணுவத்தால் இஸ்ரேல் நாட்டின் ஹார்பி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.