ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் செலுத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் அழித்தது.
இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் பதற்றமாக சூழல் நிலவி வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம், ஜம்மு நோக்கி வந்த பாகிஸ்தான் ட்ரோன்களை வழிமறித்து தாக்கி அழித்தது.
பஞ்சாபின் பதான்கோட், ஜம்மு காஷ்மீரின் சம்பா, அக்நூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எஸ்-400 ஏவுகணை அமைப்பு உதவியுடன், பாகிஸ்தானின் 8 ஏவுகணைகளையும் வானிலேயே இந்திய ராணுவம் வீழ்த்தியது.
அதேபோல் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான F16 போர் விமானம் உள்ளிட்ட 3 போர் விமானங்களை இந்திய வான் பாதுகாப்பு கவச அமைப்பு சுட்டு வீழ்த்தியது. சர்கோடா நகரில் இருந்து ஜம்மு நோக்கி வந்த F16 போர் விமானமும் பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரித்த JF-17 ரகத்தைச் சேர்ந்த 2 போர் விமானங்களும் அழிக்கப்பட்டன….