மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவானது கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சேதுபதி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.