ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் நடைபெற்ற பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன.
பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலால் சில வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன.
பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கை அப்பாவி மக்களை கொல்லும் நோக்கிலேயே இருப்பதாக ஜம்மு காஷ்மீர் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.