சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி, ஜூலை மாதம் 23-ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்திற்குப் பேட்டைக்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.