இது பிரதமருக்குத் துணை நிற்க வேண்டிய தருணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்களைத் தாக்கப் பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து மக்களைக் காத்து வரும் ராணுவப் படைகளுக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்குத் தேசமாக அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.