விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்களைக் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து ஆரோவில் அடுத்த பூத்துறையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரி மற்றும் காரை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரைக் கைது செய்தனர்.